புள்ளி மயங்கியல் புறனடைச் செய்தி

மண்ணப் பத்தம் – அல்வழிக்கண் ணகர ஈறு அக்குப் பெற்றது.பொன்னப்பத்தம் – அல்வழிக்கண் னகர ஈறு அக்குப் பெற்றது.மண்ணங்கட்டி – அல்வழிக்கண் ணகர ஈறு அம்முப் பெற்றது.பொன்னங்கட்டி – அல்வழிக்கண் னகர ஈறு அம்முப் பெற்றது.மண்ணாங்கட்டி – அல்வழிக்கண் மரூஉ முடிவு.கானாங்கோழி – அல்வழிக்கண் மரூஉ முடிபு.வேயின்தலை – யகரஈறு வேற்றுமைக்கண் இன்சாரியை பெற்றது.நீர் குறிது – ரகர ஈறு அல்வழிக்கண் இயல்பு; வேர்குறிது,வேர்க்குறிது – ரகர ஈறு அல்வழிக்கண் உறழ்ச்சி; வடசார்க் கூரை,மேல்சார்க் கூரை – ரகர ஈறு வல்லெழுத்துப் பெற்ற மரூஉமுடிபு; அம்பர்க்கொண்டான், இம்பர்க் கொண்டான், உம்பர்க் கொண்டான், எம்பர்க் கொண்டான் -என ஏழன் உருபின் பொருள்பட வந்த பெயர்கள் வல்லொற்றுப் பெற்றன.தகர்க்குட்டி, புகர்ப்போத்து – ரகரஈறு இருபெயரொட் டின்கண்வல்லொற்று மிக்கது.விழன் காடு – லகரஈறு வேற்றுமைக்கண் றகரம் ஆகாது னகரம் ஆயிற்று.கல்லம்பாறை, உசிலங்கோடு, எலியாலங்காய், புடோலங்காய் – லகர ஈறுஅம்முப் பெற்றது.கல்லாம்பாறை – மரூஉ முடிபு பெற்றதுஅழலத்துக் கொண்டான் – அத்துப் பெற்றது.அழுங்கற் போர், புழுங்கற் சோறு – லகரஈற்று அல்வழித்திரிபு.வீழ் குறிது, வீழ்க் குறிது – ழகரஈற்று அல்வழி உறழ்ச்சி.தாழம்பாவை – ழகரஈறு அல்வழியில் அம்முப் பெற்றது.யாழின் கோடு – ழகரஈறு ‘இன்’ பெற்றது.முன்னாளைப் பரிசு, ஒருநாளைக் குழவி – ளகரஈறு ஐகாரமும்வல்லெழுத்தும் பெற்றது.குளத்தின் புறம் – மகரஈறு அத்தும் இன்னும் பெற்றது.பொன்னுக்கு, பொருளுக்கு, நெல்லுக்கு, பதினேழு, பல்லுக்கு,சொல்லுக்கு – வழக்கின்கண்ணும் செய்யுட்கண்ணும் புள்ளி யீறுகள் உகரம்பெற்றன.பல் +கு = பற்கு – என உருபேற்புழி, லகரம் றகரமாகத் திரிந்தது.(தொ.எ.405 நச்.)