ஏகார ஓகாரங்களொடு வரிவடிவில் வேறுபாடில்லாத எகர ஒகரங்கள்,மெய்யெழுத்துக்கள், ஈற்றுக் குற்றியலுகரங்கள், ஆய்தம் – என்பன புள்ளிபெறும்.மகரக்குறுக்கம் மேற்புள்ளியோடு உட்புள்ளியும் பெறும்.(ம் {{special_puLLi}} )புள்ளி, எழுத்தின் இயல்பான மாத்திரையைப் பாதியாகக் குறைத்ததைத்தெரிவிப்பதற்கு அறிகுறியாக வரும். (தொ. எ. 15, 16, 14, 105, நச்.)(பொ. 320 பேரா.)