நிலைமொழி புள்ளியீற்றதாக, வருமொழி முதலில் உயிர் வரின், அவ்வருமொழி உயிர் நிலைமொழியீற்றுப் புள்ளி யெழுத்தொடு கூடிஉயிர்மெய்யாய்விடும்.எ-டு : ஆல் + இலை = ஆலிலை; நாகு + அரிது = நாகரிதுமெய்யீறு புள்ளி பெறுவது போலக் குற்றியலுகர ஈறும் புள்ளி பெறும்எனவே, புள்ளியீறு என்பதனுள் மெய்யீறு குற்றுகர ஈறு என இரண்டும்அடங்கும். உயிர், மெய்யீற் றொடும் குற்றியலுகர ஈற்றொடும் சேர்ந்துஇயலும்.உயிர், இயல்பாய மெய்யீற்றொடும் குற்றியலுகர ஈற்றொடும் சேர்ந்துஇயலுதல் போலவே, விதியான் வந்த மெய்யீறு குற்றியலுகர ஈறு இவற்றொடும்சேர்ந்து இயலும்.எ-டு : அதனை – அத் + அன் + ஐ அவற்றொடும் – அவ் + வற்று + ஒடு +உம்அது என்பது உகரம் கெட்டு ‘அத்’ ஆயிற்று. முற்றியலுகர மாகிய ஒடுஎன்பது அவற்று என்பதனொடு சேர்ந்து அவற்றொடு – எனக் குற்றியலுகர ஈறாகி‘உம்’ புணர்ந்து, குற்றியலுகரத்தின் மீது உகரஉயிர் ஊர அவற்றொடும்என்றாயிற்று.உயிர்முதல்மொழி வர, நிலைமொழியீற்றுமுற்றியலுகரம் கெடும் என்றுகூறிய தொல். குற்றியலுகரம் கெடும் என்னா ராய் இயல்பாகப் புணரும் என்றேயாண்டும் கூறலின், குற்றியலுகர ஈற்றின் மேலும் உயிர் ஊர்ந்து வரும்என்பதே அவர் கருத்து. (எ. ஆ. பக். 105)புள்ளியீறாகிய குற்றியலுகரம் ஏற்ற எழுத்தில் குற்றியலுகரம் கெடஎஞ்சிநிற்கும் மெய்யின்மீது உயிர் ஏறி முடியும். இது சிவஞான. கருத்து.பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் கருத்தும் அதுவே.எ-டு : நாகு + அரிது > நாக் + அரிது = நாகரிது (எ. கு. பக். 142)