‘புள்ளி இறுதி முன்னிலைக் கிளவி’

மெய் ஈறாக அமையும் முன்னிலைச் சொற்கள். முன்னிலைச் சொற்கள்,முன்னின்றான் செயலை உணர்த்துவனவும், முன்னின்றானைத்தொழிற்படுத்துவனவும் என இருவகைய. முன்னின்றானைத் தொழிற்படுத்துவனஏவல்வினை எனவும் படும்.யகர ரகர ஈறுகள் முன்னின்றான் நின்றார்தம் தொழில் உணர்த்துவன.எ-டு : உண்பாய் – யகர ஈறு; உண்பீர் – ரகர ஈறுனகர ஈறு முன்னின்றாரைத் தொழிற்படுக்கும் ஏவல் பொருள் தரும்.எ-டு : உண்மின் கொற்றீர் – னகரஈறுஞ்ண் ந் ம் ல் வ் ள் ன் – ஈற்று ஏவல்வினைகள் உகரம்பெறும்.எ-டு : உரிஞு கொற்றா, உண்ணு கொற்றா, பொருநு கொற்றா, திருமுகொற்றா, கொல்லு கொற்றா, வவ்வு கொற்றா, கொள்ளு கொற்றா, பன்னுகொற்றா.இவற்றுள் ண் ல் ள் ன் – என்பன உகரம் பெறாமலும் வரும்.எ-டு : உண் கொற்றா, கொல் கொற்றா, கொள் கொற்றா, பன்கொற்றா.ய் ர் – என்ற ஈற்று ஏவல்வினைகள் உறழ்ந்து முடியும்.எ-டு : எய் கொற்றா, எய்க் கொற்றா; ஈர் கொற்றா, ஈர்க்கொற்றாழகர ஈற்று ஏவல்வினை இயல்பாகும்.எ-டு : வாழ் கொற்றாஎனவே, முன்னின்றான் தொழில் உணர்த்தும் முன்னிலை ஈறுகள் ய் ர் -என்பன; முன்னின்றானைத் தொழிற்படுப்பன ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ்ள்- என்ற பதினோ ரீறுகளாம். (தொ. எ. 151 சொ.225, 226 நச்.)