புள்ளிருக்கு வேரூர்

இன்று வைத்தீஸ்வரன் கோயில் எனச் சுட்டப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தராலும் அப்பராலும் பாடல் பெற்ற தலம் இது. சிவன் பெயரான வைத்தீஸ்வரன் என்ற பெயர் கோயிலுக்கு அமைந்து, பின்னர் ஊர்ப்பெயராகக் செல்வாக்குப் பெற்றுள்ளது. புள் – சம்பாதி, ஜடாயு, இருக்கு. வேதம், வேள், முருகன் ஆகியோர் வழிபட்ட தலமாதலின் இப் பெயர் பெற்றது என்பர் எனினும் புள்களின் மிகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்க வேண்டும் என்பதே பொருத்தமாக அமைகிறது. மேலும் சடாயு வழிபட்டதால் சடாயுபுரி’ என்ற பெயரும், கந்த பெருமான் வழிபட்டதால் கந்தபுரி என்ற பெய ரும், சூரியன் வழிபட்டதால் பரிதிபுரி என்ற பெயரும், அங் காரகன் வழிபட்டதால் அங்காரக்கபுரம் என்ற பெயரும் வழங் கப்பட்டுள்ளன எனவும் தெரிகிறது.