இன்று பசுபதிக் கோயில் எனச் சுட்டப்படும் இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
கறையார் மிடறுடையான் கமழ் கொன்றைச் சடைமுடி மேல்
பொறையார் தரு கங்கைப் புனலுடையான் புளமங்கைச்
சிறையார் தரு களிவண்டறை பொழில் சூழ் திருவாலந்
துறையானவனறையார் கழல்தொழுமின் துதி செய்தே’
என சம்பந்தர் இத்தலம் குறித்துப் பாடுகின்றார் (16-3). இப்பாடலில் புளமங்கை இடத்தின் பெயர் என்பதும், ஆலந்துறை கோயில் பெயர் என்பதும் தெளிவாகத் தெரிகின்றன. காவிரிக் கரையில் அமைந்து இயற்கைச் செழிப்பு மிக்க பகுதியாக விளங்கிய காரணத்தால் புள் மிகுதி காரணமாக இவ்விடம் புள் மங்கலம் என்று அழைக்கப்பட்டு பின்னர் புள்ளமங்கை என வழங்கியது எனல் பொருத்தமாக அமையலாம். இன்று கோயில் சிறப்பு. இயற்கை வளங்களை மிஞ்ச இறைவன் பெயரால் பசுபதி கோயில் என்ற பெயர் வழக்கில் அமைந்து விட்டது எனல் பொருத்தமானதாகும்.