புளிமரப்பெயர் புணருமாறு

புளி என்ற மரப்பெயர் அம்முச்சாரியை பெற்று வருமொழி யொடுபுணரும்.எ-டு: புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல், புளியம்பூ;புளியஞெரி, புளியநுனி, புளியமுரி; புளியயாழ், புளியவட்டு -என வன்கணம் வருவழி அம்முப் பெற்றும், மென்கணமும் இடைக்கணமும்வருவழி அம்மின் மகரம் கெட்டும் புணர்ந்தவாறு. (தொ. எ. 244 நச்.)