புளிங்குடி

இன்று புளியங்குடி என்று வழங்கப்படும் ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைகிறது. திருமால் கிடந்த நிலையில் கோலம் கொண்ட கோயில் இங்கு அமைகிறது. புளி’ தாவரம் குறித்து அமைந்த சிறப்பு விகுதியாக அமைகிறது. எனவே புளியமரங்கள் நிறைந்த அழகிய குடியிருப்புப் பகுதி என்று இப்பெயர்க் காரணம் அமைகிறது. நம்மாழ்வார் இத் தலத்து இறைவனைப் பாடுகின்றார்.இவரது கிடந்த கோலத்தை
கொடியார் மாடக் கோளூரகத்துப் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்ததுதான் (நாலா -2880)
என்ற பாடல் தருகிறது. மேலும் பொருநையாற்றின் கரையில் இருக்கும் நிலையை,
தண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடி (நாலா – 2975)
என்ற அடிகள் சுட்டுகின்றன. இவ்வூரின் அழகினை,
கொடிக் கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப்புளிங்குடி (நாலா -2976)
பவள நன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல்
தண் திருப்புளிங்குடி (2979)
கலி வயல் திருப்புளிங்குடி (… 2980)
என்று தருகின்றார் நம்மாழ்வார்.