புல்லாற்றூர்

எயிற்றியனார்‌ என்ற சங்ககாலப்புலவர்‌ இவ்வூரைச்‌ சார்ந்‌தவர்‌. ஆகவே புல்லாற்றூர்‌ எயிற்றியனார்‌ எனப்‌ பெயர்‌ பெற்‌றார்‌: இவர்‌ பாடிய புறப்பாடல்‌ மூலம்‌ கோப்பெருஞ்சோழன்‌ தன்‌ மக்கள்‌ மீது போருக்குச்‌ சென்றதாகத்‌ தெரிகிறது. புல்லாற்றூர்‌ எயிற்றியனார்‌ அவ்வாறு, போர்‌ மேல்‌ சென்றானைச்‌ சந்து செய்ததாகத்‌ தெரிகிறது. இவ்வூரின்‌ வழிகளில்‌ புலிகளின்‌ நடமாட்டம்‌ அதிகமாக இருந்தது, அதைக் குறிக்கும்‌ புல்லாறு எனத்‌ தொடரால்‌ பெயர், பெற்ற ஊராக இருந்து புல்லாற்றூர்‌ எனப்பெற்றதோ என எண்ணவும்‌ இடமளிக்கிறது. (புல்‌ புலி) ஆற்றங்கரையின்‌ ஊராக இருந்து ஆற்றூர்‌ எனப்‌ பெயா்‌ பெற்றிருக்கலாம்‌.