திருப்புல்லாணி என்று சுட்டப்படும் ஊர், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. ராமன் புல்லணைமேற் கிடந்து வருணனை வேண்டிய தலம்’ தான் திருப்புல்லணை. அதனையே திருப்புல்லாணி என்கிறார்கள் என்ற எண்ணம் இடப்பெயர்க் காரணமாக அமைகிறது. இன்றும் தர்ப்பையில் சயனக் கோல மாக இருக்கிறார். புல்லாணி போன்றே இதை அடுத்துக் காணப் படும் தேவி பட்டணம். நவபாஷாணம் போன்றவையும் இராமர் வரலாற்றொடு இணைந்ததாகக் கருதப்படுகிறது. திருமங்கை யாழ்வார் புல்லாணி இராமனை மிகச் சிறப்பாகப் பாடும் நிலை யில் அமையும்,
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாயப் புல்லாணியே (நாலா -1768)
பொருது முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே (நாலா – 1771)
போன்ற எண்ணங்கள் கடற்கரை சார்ந்த இவ்வூரின் நிலையையும் சுட்டுகின்றன..