புலியூர்

குட்ட நாட்டு ஊரான இது, திருமால் கோயில் கொண்ட ஊர். நம்மாழ்வார் பாடல்கள் கொண்டது.
செழுநீர் வயல்குட்டநாட்டுத் திருப்புலியூர் (நாலா-2942),
புன்னையம் பொழில் சூழ் திருப்புலியூர் (-2943)
திகழுமணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் (-2944)
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெருஞ் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்புலியூர் (நாலா-2941)
போன்ற பாடல்கள் குட்டநாட்டுப் புலியூர் பற்றியியம்புகின்றன. இவரது பாடல்கள் இங்கு மக்கள் நெருங்கி வாழ்ந்திருந்தமையைப் புலப்படுத்த, முதலில் புலிகள் மிக்குக் காணப்பட்டு, பின்னர் குடியிருப்புப் பகுதியாக அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது