புற்குடி என்ற பெயர், திருநாவுக்கரசரால், தமது திருத் தாண்டகப் பகுதியுள் சுட்டப்படுகிறது. புற்குடி பாகுடி (285-3) எனச் சுட்டிச் செல்கின்றார் இவர். பிற எண்ணங்கள் தெளிவாகவில்லை. சிவன் கோயில் தலம் என்பது தெளிவு. குடியிருப்புப் பகுதி என்பது குடி என்ற பெயர் கொண்டு சுட்டலாம். புல் மிகுதியான காரணத்தால் புல்குடி புற்குடி ஆகியிருக்கலாமோ எனவும் நோக்கலாம்.