திருப்பனங்காடு என்று இன்று சுட்டப்படும் தலம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பனைமரக்காடு காரணமாகம் பெயர் பெற்றது என்பது தெளிவு. தலமரமும்பனை இங்கு யாக அமைகிறது, சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம்.
மயிலார் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங் காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக் கட்பயிலாதார் பயில்வென்னே (86-6)
மஞ்சுற்ற மணிமாட வன் பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத் தெங்கள் பிரானை நினையாதார் நினைவென்னே 86-8)
என்ற பாடலடிகள் பனங்காட்டூர் சிவன் கோயில் தோன்றிய பின்னர், மக்கள் வாழும் பகுதியாக மாறியது என்ற எண்ணத் தைத் தரும் நிலையில் அமைகிறது. மேலும் பனங்காட்டூர் என, பனை மரம் காரணமாகம் பல சர்கள் பெயர் பெற்றமைய, தனிமைப்படுத்த வன்பார்த் தான் பனங்காட்டூர் எனச் சுட்டினரோ எனத் தோன்றுகிறது எனினும் வன்பார்த்தான் என்பதற்குரியப் பொருள் தெளிவாக வில்லை. சேக்கிழாரும் இதனை, மாடநெருங்கு வன்பார்த்தான் பனங்காட்டூர் செல்வமல்கு திருப்பனங்காட்டூர் (ஏயர் 193, 194) என்று புகழ்கின்றார். தவிர, புறவார் பனங்காட்டூர் என்பது இன் னொரு ஊர்ப்பெயராக அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், பனையபுரம் என்று இன்று தென் ஆர்க்காடு மாவட்டத்தில் காணப்படுகிறது.
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர்மலர் நிரைத் தாதளஞ் செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர் (189-2)
எனவும்
வாளையும் கயலும் மிளிர் பொய்கை
வார்புனற் கரை யருகெலாம் வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர் (189-2)
எனவும் சம்பந்தர் பாடும் நிலையில் பனங்காடாக இருந்தபோதிலும் நீர் வளமிக்கப் பகுதிகளையும் கொண்டு திகழ்ந்தது இவ்வூர் தெரிகிறது. இங்கும் பனங்காட்டூர் என்பது விளக்கமாக அமைகிறதே தவிர புறவார் விளக்கம் பெறவில்லை. இக்கோயிலில் உள்ள தலவிருட்சம் பனையாகும்.