புறப்புறச் செய்கை

இது செய்கைவகை நான்கனுள் ஒன்று. நிலைமொழி ஈறும் வருமொழி முதலும்செய்கை பெறாது நிற்ப, அவ்விரண்டை யும் பொருத்துவதற்கு உடம்படுமெய்போன்ற ஓரெழுத்து வருவது புறப்புறச் செய்கையாம்.எ-டு : மணி+ அழகிது > மணி + ய் + அழகிது = மணி யழகிதுகோ + அழகிது > கோ + வ் + அழகிது = கோவழகிதுஇடையே யகரஒற்றும் வகரஒற்றும் புறப்புறச் செய்கையான் வந்தன. (தொ. எ.1, 140 நச். உரை)