இது கருவிவகை நான்கனுள் ஒன்று. மொழிகள் ஆதற்குரிய எழுத்துக்களின்இலக்கணமும் பிறப்பும் கூறும் நுல்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவிகளாம். அவை புணர்ச்சிக்குரிய புறக்கருவிகளாகிய, மொழிகளை ஆக்கும்எழுத்துக்களின் இலக்கணமும் பிறப்பும் கூறுதலின் புறப்புறக்கருவிகள்ஆயின. (தொ. எ. 1 நச். உரை)