அகமல்லாத புறப்பொருட் செய்திகள் பற்றி அமைந்த புறநானூறு,பதிற்றுப்பத்து முதலியவற்றுப் பாடல்கள். புற நானூற்றுக்கே‘புறப்பாட்டு’ என்ற பெயரும் உண்டு.‘மீனுண் கொக்கின் (227) என்ற புறப்பாட்டும் அது’ என வரும்நச்சினார்க்கினியருரையுள் காண்க.(தொ. செய். 79 நச்.)