இது நூற்பா வகை ஆறனுள் ஒன்று. சிறப்பு நூற்பாக்களின் புறத்தேஅடுத்து வருதலின் (புறன் + அடை) இது புறனடை எனப்படும். நுற்பாக்களின்புறத்தே நடத்தலின் ( புறம்+ நடை) புறநடை எனினும் அமையும். (இ.கொ.86)புறனடை நூற்பா, சிறப்பு நுற்பாக்களில் கூறப்படாது எஞ்சி நிற்கும்செய்திகளைக் கோடற்கு வழிகோலுவதாய் உள்ளது.பிண்டம், தொகை, வகை, குறி, செய்கை, புறனடை- என நூற்பாஅறுவகைப்படும். பெரும்பான்மையும் ஒவ்வோரியல் இறுதியிலும் புறனடைநூற்பா அவ்வியற் செய்தியை நிறைவு செய்வதற்காக இடம் பெறும். (நன்.பாயி. 20)