புறநிலை

1. 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று; “நீ வணங்கும் தெய்வம் நின்னைப்புறங்காப்ப நின் மரபு சிறப்பதாகுக!” என்று பாட்டுடைத் தலைவனைப்புகழ்ந்து பாடுவது.2. சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று. (சிலப். 8-41 உரை)