இது செய்கைவகை நான்கனுள் ஒன்று. செய்கையாவது நிலைமொழி வருமொழிப்புணர்ச்சி. நிலைமொழிக்குப் புறமாய் அதனை அடுத்து வந்து புணரும்வருமொழிச் செய்கை கூறுவது புறச் செய்கையாம்.லகர னகர ஈறுகளின் முன் வரும் தகரம் றகரமாகவும் நகரம் னகரமாக வும்திரிதலும், ளகர ணகர ஈறுகளின் முன் வரும் தகர நகரங்கள் டகர ணகரங்களாகத்திரிதலும் போல்வன புறச் செய்கையாம்.எ-டு : கல்+தீது = கற்றீது; பொன் + தீது = பொன்றீது; கல் +நன்று = கன்னன்று; பொன் + நன்று = பொன்னன்று; முள் + தீது = முட்டீது;முள் + நன்று = முண்ணன்று; கண் + தீது = கண்டீது; கண் + நன்று =கண்ணன்றுஇவற்றுள் வருமொழி முதலெழுத்தின் திரிபு புறச்செய்கை யாம். (தொ. எ.149, 150 நச்.)