புறக்கருவி

இது கருவிவகை நான்கனுள் ஒன்று. ஈண்டுக் கருவியாவது நிலைமொழிவருமொழிப் புணர்ச்சிக்குக் கருவியாக உதவு வது. புறக்கருவியாவதுநிலைமொழி வருமொழிகளாய் நிற்கும் மொழிகளின் மரபு கூறுவது. அதுசெய்கையாகிய புணர்ச்சிக் குரிய கருவி கூறாது, புணர்ச்சிநிகழ்த்துவதற்குரிய மொழிகளின் மரபு கூறுதலின் புறக்கருவி ஆயிற்று.ஆகவே மொழிமரபு என்னும் இயல் புறக்கருவியாம். (தொ. எ. 1 நச். உரை)