யாதானும் ஒரு நிமித்தத்தான் ஒன்றனை முற்கூறி வேறொரு நிமித்தத்தான்அதனையே பின்னும் கூறுதல் அநுவாதம். அநுவாதத்திற்கு முன்னர்க்குறிப்பிடப்படுவது புரோவாதம். புரோவாதத்தை உணர்ந்தால்தான் அநுவாதத்தைஉணர முடியும்.எ-டு : ‘ அன் ஆன் அள் ஆள் ஆர் ஆர் ப(ம்) மார்அ ஆ குடுதுறு என் ஏன் அல் அன் ’ (நன். 140)முதலிற் கூறப்பட்ட ‘அன்’ விகுதி புரோவாதம்; பின்னர்க் கூறப்பட்ட‘அன்’ அநுவாதம். இரண்டாவது அன்விகுதியை நோக்க முதலாவது புரோவாதம் ஆம்.(சூ. வி. பக். 19)