“புரம்” என்ற பொதுக்கூற்றின் பொருளையே இவ்வடிவமும் கொண்டிருக்கின்றது. இவ்வடிவம் பெரிய ஊர்களையும் இராசதானிகளையும் குறித்து வருமென்று அகராதியும் [23] சூடாமணி நிகண்டும் [24] குறிப்பிட்டாலும், இது சாதாரண ஊர்களின் பெயரில்தான் வந்துள்ளது. இதன் வருகை “புரம்” என்ற வடிவத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாகும்.