புயவருணனை

சிறந்த தலைவனொருவனுடைய புயங்கள் செய்துள்ள வீரம் கொடை முதலியசெய்கைகளைப் பாராட்டி அப்புயங்களின் உருவ அமைப்பினையும் வருணித்தல்.(இது கலம்பகத்தில் புய வகுப்பு என்ற பெயரிற் காணப்படும் கலம்பகஉறுப்பாம்.) இது பாடாண்துறைகளுள் ஒன்று.காப்பியத் தலைவனுடைய திருப்புயங்கள் அடியவரை அளிக்கும் திறனையும்,பகைவர்களை அழிக்கும் திறனையும் புனைந்து கூறும் துறை. (திருவரங்கக் .7)