புன்கூர்

திருப்புன்கூர் என்ற ஊர். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. புங்க மரம் மிகுதி காரணமாகப் பெயர் பெற்ற ஊர் புங்கூர், புன்கூராக வழங்குகிறது. தலமரமும் புங்கமரமாக அமைகிறது. தேவார மூவர் பாடல் பெற்றமை இதன் சிறப்பு தரும். திருநாளைப் போவார் வணங்குவதற்காக, நந்தியை இறைவன் விலகச் செய்த தலம் இது. செழும் பொழில் திருப் புன்கூர், பூம்பொழில் திருப்புன்கூர் என்று சுந்தரர் தம்பாக்களில் தனைச் சுட்டுகின்றார் (55). சம்பந்தர்.
பங்கயங்கள் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர் (27-3)
தெரிந்திலங்கு கழுநீர் வயல் செந்நெல்
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் (27-6)
என இதன் அழகு புலப்படுத்துகிறார்.