புதியன புகுதல்

முற்காலத்து இல்லாத சில பிற்காலத்து இலக்கணமாக வருதல். அவைவருமாறு:தன்மை ஒருமைக்கண் அன்விகுதியும், பன்மைக்கண் ஓம் விகுதியும், நீர்உண்ணும் – நீர் தின்னும் – என உம் ஈற்றவாய் வரும் பன்மை ஏவலும்,அல்ஈற்று வியங்கோள் எடுத்தோதாத பிற ஈற்றவாய் இருதிணை ஐம்பால்மூவிடங்களிலும் வாழ்த்து முதலிய ஏவற்பொருளவாய் நிகழ்வனவுளவேல்அவையும்,உண்டு என்பது அஃறிணை ஒருமைக்கேயன்றிப் பிறவற்றிற்கும் பொதுவினையாய்வருதலும்,யார் என்னும் வினா வினைக்குறிப்புமுற்று அஃறிணைக்கண் வருதலும்,யார் என்பது ஆர் என மரீஇ வருதலும், ஈ-தா-கொடு – என்னும் மூன்றும்இழிந்தோன் – ஒப்போன் – மிக்கோன் – இரப்புரையாக முறையே வாராமல் மயங்கிவருவன உளவேல் அவையும்,மன் – கொல்- எனற்பால இடைச்சொற்கள் மன்னை – கொன்னை – எனவருவனவும்,‘அவனே கொண்டான்’ என்புழி ஏகாரம் ஒரோவழி ‘அவன் கொள்கிலன்’ எனஎதிர்மறைப்பொருள் தருதலும், (இன்னோ ரன்னவும்) புதியன புகுதலாம். (நன்.332, 337-339, 349, 407, 420, 422 சங்கர.)