நிலைமொழி தனிக்குறிலை அடுத்த லகரஒற்று ஈற்றதாகவோ ளகரஒற்றுஈற்றதாகவோ இருப்ப, அல்வழிப் புணர்ச்சியில் வருமொழிக்கண் தகரம்முதலெழுத்தாக வரின், லகரமும் ளகரமும் ஆய்தமாகத் திரிந்து புணரும்நிலையுமுண்டு. அங் ஙனம் திரியும் நிலையில் ஆய்தம் புணர்மொழிக்கண்வரும்.எ-டு : கல் + தீது = கற்றீது, கஃறீது; முள் + தீது = முட்டீது,முஃடீதுஇத்திரிபுகளை நோக்க, ஆய்தம் றகரத்தை அடுத்தபோது அதன் ஒலியதாகவும்டகரத்தை அடுத்தபோது அதன் ஒலிய தாகவும் பண்டு ஒலிக்கப்பட்டிருத்தல்வேண்டும் என்பது புலனாகிறது. (தொ. எ. 39, 369, 399 நச்.) (எ. ஆ. பக்.85)