நிலைமொழி குற்றியலுகர ஈறாய் வருமொழியொடு புணரு மிடத்து அல்வழிவேற்றுமை என்ற இருநிலையிலும் குற்றிய லுகரம் நிலைபெற்றிருக்கும்.எ-டு : நாகு கடிது, நாகு கடுமை (தொ. எ. 408 நச். உரை)அல்வழி வேற்றுமை என்ற இருவகைப் புணர்ச்சிக்கண்ணும்நிலைமொழியிறுதிக் குற்றியலுகரம் முற்றியலுகரமாய் நிறைந்துவிடும்.ஆயின் நிலைமொழியிறுதி வல்லொற்றுத் தொடர்க் குற்றியலுகரமாக, அதுவும்ககர உகரமாக, வரு மொழியாகக் ககர முதல் மொழி வரின், குற்றியலுகரம்முற்றியலுகரம் ஆகாது குற்றியலுகரமாகவே நிற்கும்.எ-டு : நாகு கடிது, வரகு கடிது; நாகுகடுமை, வரகுகடுமை எனக்குற்றியலுகரம் முற்றியலுகரமாயிற்று.செக்குக்கணை, சுக்குக்கொடு எனக் குற்றியலுகரம் புணர் மொழிக்கண்முற்றியலுகரம் ஆகாது குற்றியலுகரமாகவே நின்றது. (தொ. எ. 409, 410 இள.உரை)