நிலைமொழி இறுதியில் குற்றியலுகரம் நிற்ப, வருமொழி முதலில் யகரம்வரின், அவ்வுகரம் முற்றத் தோன்றாதாக அதனிடத்துக் குற்றியலிகரம்வரும்.எ-டு : நாகு + யாது = நாகியாது; வரகு + யாது = வரகியாது; எஃகு +யாது = எஃகியாது; கொக்கு + யாது = கொக்கி யாது; குரங்கு + யாது =குரங்கியாது; போழ்து + யாது = போழ்தியாது. (தொ. எ. 410 நச்)