புணர்நிலைச் சுட்டு

சொல்லப்பட்ட ஒரு சொல்லோடு அடுத்த சொல் கூடும் நிலைமையாகிய கருத்து.இந்நிலையில் முதலில் நிற்கும் சொல்லை ‘நிறுத்த சொல்’ என்றும், அடுத்துவரும் சொல்லைக் ‘குறித்து வரு கிளவி’ என்றும் கூறுப. நிறுத்த சொல்லொடுகுறித்து வரு கிளவி கூடும் நிலைமைக்கண், நிறுத்த சொல்லின் இறுதிஎழுத்தும், குறித்து வரு கிளவியின் முதலெழுத்தும் தம்முள் புணர்தலேபுணர்ச்சியாம்.(தொ. எ. 107 நச்.)