புணர்ச்சி

மெய்யையும் உயிரையும் முதலும் இறுதியுமாக உடைய பகாப்பதம் பகுபதம்என்னும் இருவகைச் சொற்களும் தன்னொடு தானும் தன்னொடு பிறிதுமாய்வேற்றுமைப் பொருளிலாவது அல்வழிப் பொருளிலாவது பொருந்து மிடத்து,நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவும் மூவகைத் திரிபு கொண்டும்பொருந்துவது புணர்ச்சியாம். உயிர்மெய்யை மெய்முதல் எனவும் உயிரீறுஎனவும் பகுத்துக் கொள்க. திசைச்சொல்லும் வடசொல்லும் பெயர்வினை இடை உரிநான்கும் பகாப்பதம் பகுபதம் என்ற இரண்டனுள் அடங்கும். (நன். 151)