இலக்கணக் கொத்தினைத் தழுவி உரைக்கப்படும் இவ்விகாரங் களுள்,புணர்ச்சி விகாரம் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சி யால் நிகழும் தோன்றல்- திரிதல் – கெடுதல் – இம்மூன்றுமாம்.எ-டு : ஊர் + குருவி = ஊர்க்குருவி; வேல் + தலை = வேற் றலை;பழம் + நன்று = பழநன்று என முறையே காண்க.இருமொழிப் புணர்ச்சியானன்றி ஒருமொழிக்கண்ணேயே நிகழும் தோன்றல் -திரிதல் – கெடுதல் – நிலைமாறுதல் – விரித்தல் – நீட்டல் – குறுக்கல் -வலித்தல் – மெலித்தல் – தொகுத்தல் – முதல் இடைக் கடைக் குறைகள் -என்பன புணர்ச்சி இல் விகாரமாம்.எ-டு : யாது – யாவது; அழுந்துபடு – ஆழ்ந்துபடு; யாடு – ஆடு;மிஞிறு – ஞிமிறு, விளையுமே – விளையும்மே; இது – ஈது; தீயேன் – தியேன்;குறுந்தாள் – குறுத்தாள்; தட்டையின் – தண்டையின்; சிறியவிலை -சிறியிலை; தாமரை – மரை; ஓந்தி – ஓதி; நீலம் – நீல் (சுவாமி. எழுத்.27)