புணர்ச்சி விகாரங்கள்

பதத்தொடு பதம் புணருங்கால், சந்தி காரணமாகப் பலமுறை நிலைப்பதஈற்றெழுத்தாயினும் வரும்பத முதலெழுத்தாயினும் பலவிடத்து ஒருப்படஇரண்டும் வேறெழுத்தாகத் திரிதலும், முற்றும் கெடுதலும் ஆகும். பலமுறைஇருபத நடுவே ஆக்கமாக மிகலும் ஆம். இம்மூவிகாரம் அன்றியும், சிலமுறைஇருபதம் ஒருபதமாகத் திரண்டு கலப்புழிச் சில எழுத்து அவ்வழிவிகாரப்படும் எனக் கொள்க.அவை திரிபு (மெய் பிறிது ஆகல்), அழிவு (குன்றல்), ஆக்கம்(மிகுதல்), திரட்டு (வேத + ஆகமம் = வேதாகமம் போன்ற வடமொழிப்புணர்ச்சி) என்பனவாம். (தொ. வி. 21 உரை)