புணர்ச்சி நிலைபெற்று அமைதல்

புணர்ச்சியாவது நிலைமொழி ஈற்றெழுத்தொடு வருமொழி முதலெழுத்துப்புணர்வது. நிலைமொழியது ஈற்றெழுத்து முன்னர்ப்பிறந்து கெட்டுப்போக,வருமொழியது முத லெழுத்துப் பின்னர்ப் பிறந்து கெட்டமையான், முறையேபிறந்து கெடுவன ஒருங்குநின்று புணருமாறு இன்மையின் புணர்ச்சிஎன்பதொன்று இன்றாம்பிற எனின், அச்சொற் களைக் கூறுகின்றோரும்கேட்கின்றோரும் அவ் வோசையை இடையறவுபடாமை உள்ளத்தின்கண்ணேஉணர்வராகலின், அவ்வோசைகள் உள்ளத்தின்கண்ணே நிலைபெற்றுப்புணர்ந்தனவேயாம். ஆகவே, பின்னர்க் கண்கூடாகப் புணர்க் கின்றபுணர்ச்சியும் முடிந்தனவேயாம் என்பது. (தொ. எ. 108 நச். உரை)