புணர்ச்சியாவது சொற்கள் ஒன்றோடொன்று அல்வழிப் பொருளிலோவேற்றுமைப்பொருளிலோ புணர்வதனைக் கூறுதலின் சொல்லதிகாரத்துக்கூறற்பாலது எனினும், நிலைமொழியீற் றெழுத்தினொடு வருமொழி முதலெழுத்துஇயைதலே புணர்ச்சி எனப்படுதலின், எழுத்தினோடு எழுத்துப் புணரும்புணரியலை எழுத்ததிகாரத்தில் கூறுதலே முறையாகும். ‘நிறுத்த சொல்லின்ஈறாகு எழுத்தொடு, குறித்துவரு கிளவியின் முதலெழுத்து இயை’தலேபுணர்ச்சி என்பது தொல். எழுத்ததிகார 108 ஆம் நூற்பாவால் புலனாம்.(எ.ஆ. பக். 1)