புணர்ச்சியும் மயக்கமும்

புணர்ச்சியும் மயக்கமும் வெவ்வேறே. புணர்ச்சி என்பது நிலைமொழிவருமொழிகள் தத்தம் தன்மை திரியாமல் செப்பின் புணர்ச்சி போல நிற்பது.மயக்கம் என்பது மணியுள் கோத்த நூல்போலத் திரிபுற்று நிற்பது.நிலைமொழியீற்றுக் குற்றுகரம் வருமொழி நாற்கணங்களொடும் புணருமிடத்துஎய்தும் திரிபுகளைத் தனக்கு முன்னும் பின்னும் நிற்கும் எழுத்துக்களேபெறத் தான் திரிபுறுதல் இன்மையின், குற்றியலுகர மயங்கியல் என்னாதுபுணரியல் என்றார். தனித்து வரல் மரபினையுடைய உயிரீறு புள்ளியீறுகள்அன்ன அல்லவாம். (தொ.எ.பக்.311 ச.பால.)