புணர்ச்சியில் விகாரங்கள்

புணர்ச்சியில் விகாரம் ஏழாம்.முதலாவது தோன்றல்.எ-டு : குன்று – குன்றம், செல்உழி – செல்வுழி. முறையே அம், வ் -தோன்றின.இரண்டாவது திரிதல்.எ-டு : மாகி – மாசி (ககரம் சகரமாகத் திரிந்தது)மூன்றாவது கெடுதல்.எ-டு : யார் – ஆர், யாவர் – யார் (முறையே யகர மெய்யும் வகரஉயிர்மெய்யும் கெட்டன)நான்காவது நீளல்.எ-டு : பொழுது – போது, பெயர் – பேர் (ஒகரமும் எகரமும் முறையேநீண்டன)ஐந்தாவது நிலைமாறுதல்.எ-டு : வைசாகி – வைகாசி (சகரம் ககரம் நிலைமாறின). நாளிகேரம் -நாரிகேளம், தசை – சதை, ஞிமிறு – மிஞிறு, சிவிறி – விசிறி.ஆறாவது மருவி வழங்குதல்.எ-டு : என்றந்தை – எந்தைஏழாவது ஒத்து நடத்தல்.எ-டு : நண்டு – ஞண்டு, நெண்டு – ஞெண்டு, நமன் – ஞமன்(நகரத்திற்கு ஞகரம் போலியாக வந்தது).(தொ. வி. 37 உரை)