வன்கணம் மென்கணம் இடைக்கணம் உயிர்க்கணம் என்ற நான்கும்புணர்ச்சிக்கண் வருமொழி முதலெழுத்திற்குரிய நாற்கணங்களாம். இவற்றுள்வன்கணம் நீங்கலான ஏனைய மூன்று கணங்களும் பெரும்பாலும் இயல்பாகப்புணர்தலின் இயல்புகணம் எனப்படும். (தொ. எ. 203 – 207 நச்.)