புணர்ச்சிக்கண் க ச த ப -க்களுக்குரிய இயற்கை மெல் லெழுத்துக்கள்,அவை தோன்றும் இடத்திலேயே தோன்றி மூக்கின் வளியிசையான் சற்றுவேறுபட்டொலிக்கும் ங ஞ ந ம -க்களாம்.எ-டு : விள + கோடு = விள ங் கோடு; விள + செதிள் = விள ஞ் செதிள்; விள + தோல் = விள ந் தோல்; விள + பூ = விள ம் பூ (தொ. எ. 143 நச்.)