‘புணரியல் நிலையிடை உணரத் தோன்றா’தன

புணர்ச்சிக்கண் நிலைமொழி வருமொழிகளாகப் பகுத் துணரப்படாதன நான்கு.அவை வருமாறு:1. குறிப்பு, பண்பு, இசை – என்ற பொருண்மைக்கண் உயிரீறும்புள்ளியீறுமாய் நிற்கும் சொல்லாகி ஒருவழிப்பட வாராத சொற்றன்மை குறைந்தசொற் களாகிய உரிச்சொற்கள்:எ-டு : கண் விண்ண விணைத்தது, கண் விண் விணைத்தது – குறிப்புஉரிச்சொல்; ஆடை வெள்ள விளர்த்தது, ஆடை. வெள் விளர்த்தது -பண்புஉரிச்சொல்; கடல் ஒல்ல ஒலித்தது, கடல் ஒல் ஒலித்தது – இசை உரிச்சொல்இவை உயிரீறாயும் புள்ளியீறாயும் நிற்றலின் ஒன்றனுள்அடக்கலாகாமையின் நெறிப்பட வாராதன.2. உயர்திணை அஃறிணை என்ற ஈரிடத்தும் உளவாகிய ஒருவன் – ஒருத்தி-பலர்- ஒன்று- பல – என்னும் ஐம்பா லினையும் அறிதற்குக் காரணமானபண்புகொள் பெயர் தொகும் தொகைச்சொல்: கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி,கரும்பார்ப்பார், கருங்குதிரை, கருங்குதிரைகள் என்பன. இவற்றுள்கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார்,கரியதாகிய குதிரை, கரியவாகிய குதிரைகள் – என ஐம்பாலினையும் உணர்த்தும்பண்பு கொள் பெயர் தொக்கவாறு.கரு என்ற பண்பு இருதிணை ஐம்பாலுக்கும் பொது ஆதலின்,ஒருபாலுக்குரிய சொல்லான் விரித்தல் கூடாமையின், கரும்பார்ப்பான்முதலியவற்றைக் கரு + பார்ப்பான் முதலியனவாகப் பிரித்துக் காண்டல்கூடாது.3. செய்யும், செய்த – என்ற பெயரெச்சச் சொற்களி னுடைய காலம்காட்டும் உம்மும் அகரமும் ஒரு சொற்கண்ணே சேர நடக்கும் புடைபெயர்ச்சிதொக்கு நிற்கும் சொற்கள்:எ-டு : ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல்யானை,செல்செலவு – என நிலன் – பொருள் – காலம் – கருவி – வினைமுதற்கிளவி -வினை- இவற்றைக் கொண்டு முடியும் பெயரெச்சத்தொகை யாம் வினைத்தொகைகளைவிரிக்குங்கால், செய்த என்ற பெயரெச்சத்து ஈறு விரிந்த அகர ஈறு இறப்புஉணர்த்தியும், (ஆடாநின்ற அரங்கு- ஆடும் அரங்கு- எனச்) செய்யும் என்றபெயரெச்சத்து ஈறு விரிந்த உம் ஈறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும்அவற்றினா னாய புடைபெயர்ச்சியைத் தோற்றுவித்து இரண்டு பெயரெச்சமும் ஒருசொற்கண் ஒருங்கு தொக்கு நிற்றலின், அவற்றை ஒரு பெயரெச்சத்தின்கண்அடக்கிப் புணர்க்கலாகாமையின், ஆடரங்கு முதலிய வற்றை ஆடு+ அரங்குமுதலவாகப் பிரித்துப் புணர்க்கலாகாது என்றார்.4. தமது தன்மையைக் கூறுமிடத்து, நிறுத்த சொல்லும் குறித்துவரும் கிளவியுமாய் வாராது தம்முன்னர்த் தாமே வந்து நிற்கும் எண்ணுப்பெயரினது தொகுதி:பத்து என நிலைமொழி அமைத்துப் பத்து என்ற வருமொழி யைக் கொணர்ந்துபுணர்க்கப்படாது, பப்பத்து எனவும் பஃபத்து எனவும் வழங்குமாறுஉணரப்படும்.ஒரோவொன்று என்பதும் அது. ‘ஓரொன்று ஓரொன்றாக் கொடு’ என்றுஅடுக்குதல் பொருந்தும்.பத்து+ பத்து – என்ற நிறுத்திப் புணர்ப்பின், அஃது உம்மைத் தொகையோபண்புத்தொகையோ ஆகுமன்றிப் ‘பத்துப் பத்தாகத் தனித்தனி’ – என்று பொருள்தாராமையின், பப்பத்து என்பதனை நிலைமொழி வருமொழியாகப் பிரித்துக்காண்டல் கூடாது என்பது. (தொ. எ. 482 நச். உரை)அ) கொள்ளெனக் கொண்டான் – என்புழிக் ‘கொள்’ என்ற நிலைமொழியோடு‘என’ என்ற வருமொழி இடைச்சொல்லைப் பிரித்துப் புணர்க்கப்படாது, ‘என’என்ற இடைச்சொல்லைப் பிரித்தால் அது பொருள் தாராது ஆதலின்.உறுப்பிலக்கணம் என்று கூறிப் பகுபதத்தைப் பகுதி விகுதி இடை நிலைசாரியை சந்தி விகாரம் – எனப் பின்னுள்ளோர் பிரித்துப் புணர்த்தலும்இளம்பூரணர்க்கும் நச்சினார்க்கினி யர்க்கும் பேராசிரியர்க்கும்உடன்பாடு அன்று. (எ. 482 இள. உரை) (பொ. 663 பேரா. உரை)