புட்பகம்

மூக்கிரட்டை என்ற ஒருவகைக்‌ கொடி புட்பகம்‌ என்று பெயருடையது. இந்தத்‌ தாவரத்தால்‌ பெற்றது புட்பக நகரம்‌. போலும்‌. புட்பகம்‌ என்பது உதயணனுக்குரிய பெரிய நகரங்களுள்‌ ஓன்று. சேனைகளுடனிருந்து இதனைப்‌ பாதுகாத்து வந்த இடவகனுக்கு உதயணனால்‌ விருத்தியாகக்‌ கொடுக்கப்பெற்றது.
”கூற்றுறழ்‌ மொய்ம்பி னேற்றுப்பெய ரண்ணல்‌
பரந்த படையொடிருந்தினி துறையும்‌
புகலரும்‌ புரிசைப்‌ பொருவில்‌ புட்பகம்‌
இருளிடை யெய்திப்‌ பொருபடை தொகுத்துக்‌
காலை வருவேன்‌ காவலோம்பிப்‌
போகல்‌ செல்லாது புரவல விருவென” (பெருங்‌.1;54;66 71)
அருநூலமைச்‌ சனயற்புல நிறீஇ
நட்புடைத்‌ தோழனன்‌ கமைந்திருந்ந
புட்புகந்‌ தன்னைப்‌ பொழுது மறைப்புக்கு” (௸.2:9:24 26)
”புட்புகம்‌ புக்குநின்‌ னட்புடனிருந்து
விளித்த பின்வாவென வளித்தவற்‌ போக்கி” (௸.4:9:32 33)