புட்டி

புட்டி1 puṭṭi, பெ. (n.)

   இடை; waist.

     ‘புட்டியிற் சேறும் புழுதியும்’ (திவ். பெரியாழ்.1,7, 6.);

     [புட்டம் → புட்டி ]

த. புட்டி → SKt. prStha

 புட்டி2 puṭṭi, பெ. (n.)

   1. பருமை; stoutness, robustness.

     “புட்டிபடத் தசநாடியும் பூரித்து” (திருமந்.574);

   2. கொழுப்பு (கொ.வ.);; tatness. plumpness.

     [புல் → புது. புது → புதல் = செறிந்ததூறு, புல்லிளம், மருந்துப்பூடு. புது → புதை → புடை. புடைத்தல் = பருத்தல், வீங்குதல். புடை → புடம் → புட்டம் = புடைத்த பின்புறம், புடைவை. புட்டம் → புட்டி = பருமை, பருத்துக் காணப்படும் கொழுப்பு (வே.க.3. 76, 77);]

த. புட்டி → SKt. pusti

 புட்டி3 puṭṭi, பெ. (n.)

   குப்பி; bottle, flask.

அவள் குழந்தைக்குப் புட்டியில் பால் கொடுத்தாள் (உ.வ.);.

க. புட்டி; தெ. புட்டி, புட்டிக; பட. புட்டி; கோத பொடி; து. புடி

     [புள் → புட்டி = உட்டுளையுள்ளது, ஒரு வகைக்கலம், சிறுபடி, குடுவை, குப்பி (வ.வ.2.37);]

 புட்டி4 puṭṭi, பெ. (n.)

   1. ஒருவகை முகத்தலளவை; measure of capacity 750 Madras padi.

   2. நிலவளவை வகை; land measure 8 to 11 1/2 acres.

   3. சிறுபடி; measure of capacity = about 1/2 Madras measure.

   4. ஒருவகை நிறுத்தலளவை; bazaar weight = 20 manu = 500 lbs.

தெ. புட்டி,

     [புள் → புட்டி = உட்டுளையுள்ளது, ஒரு வகைக்கலம், சிறுபடி (வ.வ.2.371);]