புட்டா1 puṭṭā, பெ. (n.)
வீங்கின விதை (அண்டம்); (இ.வ.);; swelled testicle.
க. புட்டெ, தெ. புட்ட
[புடம் → புட்டம் = புடைத்த பின்புறம் புட்டம் → புட்டா]
“புட்டை” பார்க்க
புட்டா2 puṭṭā, பெ. (n.)
பாவின் உடற்பகுதியில் செய்யப்படும் பூவேலைப்பாடு; flower design done in the chintz.
புட்டா puṭṭā, பெ. (n.)
சேலையில் உள்ள புள்ளிகள்; dots in saree design, (கொங்கு);
[பொட்டு-புட்டா]