புட்டம்

புட்டம்1 puṭṭam, பெ. (n.)

புடைவை (பிங்.);:

 cloth.

மறுவ. கோடி, கோடிகம், படாம்,கோசிகம், கூறை, பஞ்சி, நீவியம், சீரை, கலை, கலிங்கம், சூடி, காடிகம், தூசு, கழகம், வட்டம், ஆடை, தானை, அறுவை

தெ. புட்டமு

     [புடை → புடம் → புட்டம் = புடைத்த பின்புறம். புடைவை (வே.க.3.77);]

 புட்டம்2 puṭṭam, பெ. (n.)

   1. உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ள பகுதி. (ஆசனப்பக்கம்);; buttocks;

   2. பெண்குறி; pudendum muliebre.

க., தெ, புட்டி.

     [புள் → புட்டி = உட்டுளையுள்ளது ஒருவகைக் கலம், சிறுபடி, குடுவை, குப்பி, புட்டி → புட்டில் = அம்பராத் தூணி. தெ. புட்டிக. புட்டி = குடுவை போன்ற பறவையுடம்பின் பிற்பகுதி புட்டி → பிட்டி கொழுத்த கோழிப் புட்டியை நெய்க்குடம் என்று கூறும் வழக்கை நோக்குக.

புட்டி புட்டம் = குடுவை போற் புடைத்த மாந்தன் உடம்பின் பக்கம். ஒ.நோ. குண்டு → குண்டி.புட்டம் → பிட்டம் மா.வி.அ.ப்ர-ஸ்த எடுப்பாய் முன் நிற்பது என்பது மூலமாயிருக்கலாம் என்று கருதுகின்றது. (வ.வ.2.3738);]

 puta,pūta,a buttock cf.D pūļa etc. the original idea is the hind part the change of 1 in to t is found in D. (KKED.xWiii);