‘கெடு வாக வையாது’ (குறள் 117) என்புழிக் கெடு என்பது புடைபெயர்ச்சியைஉணர்த்தும் தல்விகுதி கெட்டு நின்றது. (‘ அறி கொன்று’ குறள் 638 – ‘களிறுகளம் படுத்த பெருஞ் செய் ஆடவர்’ நெடுநல். 171 என்பன போல்வனவும் அன்ன.)கேடு என்பது புடைபெயர்ச்சியை உணர்த்தும் தல்விகுதி கெட்டுப்பின்னர் முதல் எகரம் நீண்டது. (கோள், ஊண் என்பன போல்வனவும் அன்ன) (சூ.வி. பக். 33)