புஞ்சம்

புஞ்சம் puñjam, பெ. (n.)

   1. திரட்சி, குவியல்; collection, heap, quantity, lump.

     “சலஞ்சலப்புஞ்சமும்” (கல்லா.59,18);.

   2. கூட்டம், கும்பல்; flock, crowd, swarm.

     ” புட்குல புஞ்சம்” (இரகு.திக்குவி.266);

   3. நெசவில் 240 இழை கொண்ட நூற்கொத்து;   4. நெய்த ஆடையின் அளவு வகை; cloth of the length of 36 cubits and 38 to 44 inch in width and 14 lbs in weight.(M.M.707);.

க. புஞ்சி, து. புஞ்ச புஞ்சொ

     [புல் → புள் → பிள் → பிழம் = திரட்சி, வடிவு. புல் → (பிள்); → (பிண்டு); → பிண்டம் = தொகுதி, முழுமை, உடம்பு. புல் → பல் → பலா = பரும் பழமரம். புல் → புன் → (புன்சு); → புஞ்சம்]

த. புஞ்சம்→ Skt. Puñija.