புசிப்பு pusippu, பெ. (n.)
1. உண்ணுகை; eating, feeding, taking food.
2. உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன ஆகிய நால்வகை யணவு (பிங்);; food, of four kinds Viz, uŋbaŋa, tiŋbaŋa, nakkuvana, paruguVana.
3. வினைப்பயனுகர்ச்சி; experiencing the fruits of past actions.
“வினையளவாக ஆன்மாக்களுக்குப் புசிப்புண்டாம்” (பிரபஞ்சவி.117);.
4. நல்லூழ், ஆகூழ் (அதிட்டம்); (வின்.);; good fortune or destiny.
[புசி → புசிப்பு]