புகலூர்

திருப்புகலூர் எனச் சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காணப்படுகிறது. அக்கினி பூசித்த காரணத்தால் இத்தலம் அக்கினீசம் என்றும், ஸ்ரீவாகீசமூர்த்திகள் சரணம் அடைந்த காரணத்தால் சரண்யபுரம் என்றும் பெயர் கொண்டு விளங்குகிறது. ஸ்தல விருட்சம புன்னை மரம் ஆனமையின் புன்னைவனம் எனவும் அழைக்கப்படுகிறது என்ற எண்ணம் இது தொடர்பானது. புகல் என்பதற்கு விருப்பம், இருப்பிடம், சரண் போன்ற பல பெயர்கள் தமிழ் லெக்ஸிகனில் அமைகின்றன. எனவே இறைவன் விரும்பி அமர்ந்த ஊர் அல்லது மக்கள் விரும்பிய இடம், அல்லது இறைவனிடம் மக்கள் புகல் அடையும் அல்லது அடைந்த ஊர் என்ற நிலையில் பெயர் அமைந்ததா என நோக்கலாம். எனினும், திருஞானசம்பந்தர் அருளிய பதிசுமாகிய திருவூர்க் கோவையில் துலைபுகலூர் அகலாதிவை காதலித்தவன் அவன் சேர் பதியே (175-5) என்று அருளியிருப்பதால். ஏதோ வரலாற்றை உட் கொண்டு அவ்வாறு கூறியிருக்க வேண்டும். துலைபுகல் என்பது துலாபாரம் புகுதல் என்று பொருள் படும் ? என்ற எண்ணம் நோக்க இவ்வூர்ப் பெயருக்குப் பிற ஏதோ காரணம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. தேவார மூவராலும் போற்றப்பட்ட சிறப்புடையது இவ்வூர் கோயில், நாவுக்கரசர் திருப்புகலூர் என்று சுட்டுவது டன் பூம்புகலூர் என்றும் இதனை இயம்புகின்றார். ” புள் ளெலாம் சென்று சென்று சேரும் பூம்புகலூர் என்கின்றார் சுந்தரர் (34-8). பூம்பொய்கை சூழ்ந்த புகலூர் என்பது சம்பந்தர் கூற்று (251-8). சேக்கிழார். புண்டரிகத் தடஞ்சூழ் பழனப்பூம் புகலூர் தொழ (487) என ஞானசம்பந்தர் செல்லும் தன்மை இயம்புகின்றார். பக்தி காரணமாக இது பெரும் சிறப்பு, பின்னர் பெற்றது என்பதையே இதனைப்பற்றிய பெரியபுராண எண்ணங் கள் உணர்த்துகின்றன. கோயில் மட்டுமல்லாது புகலூர் இங்குள்ள வர்த்தமானீச்சுரம் என்ற கோயிலும் சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்புடையது (228). வர்த்தமானீச்சுரம் என்ற பெயரை கொண்டே இது சமணக் கோயில் என்பதை அறியலாம் என்பர்.