பீ என்பது மலத்தைக் குறிக்கும் இடக்கர்ப் பெயர். அது பீ குறிதுஎன்றாற் போல வருமொழி வன்கணத்தோடும் இயல் பாகப் புணரும்.ஆ என்ற நிலைமொழிமுன் பீ என்பது வருமொழியாய்ப் புணருமிடத்துஇகரமாகக் குறுகி வலிமிக்கு ஆப்பி எனப் புணரும். (தொ. எ. 250, 233நச்.)