பீர் என்பது வருமொழி வன்கணம் வந்துழி மெல்லெழுத்து மிக்குப்புணரும். பீர் அத்துப் பெறுதலும், அம்முப் பெறுத லும், இயல்பாதலும்ஆம்.பீர்ங் கொடி – மெல்லெழுத்து மிக்கது; ‘பீரத் தலர்’ – அத்துப் பெற்றது; ‘பீரமொ டு பூத்த’ – அம்முப் பெற்றது; ‘பீர்வாய்ப் பிரிந்த’ – இயல்பாயிற்று. (தொ. எ. 363, 364 நச்.உரை)