பிள்ளைக் கவிப்பருவம்

ஆண்பாற் பிள்ளைத்தமிழாயின் ஆண்பாற்குப் பதினாறாண் டும்,பெண்பாற்பிள்ளைத் தமிழாயின் பெண்பாற்குப் பூப்புப் பருவமும், எல்லைஎன்கிறது இந்திரகாளியம். மூன்று முதல் இருபத்தொரு திங்கள் அளவும் எனஎல்லை வகுக்கிறது. பன்னிரு பாட்டியல். அந்நூற் கருத்துப்படி ஆண்பாற்குஏழு, ஐந்து, மூன்று ஆண்டுகள் எனக் கொண்டு பாடுதலும், பன்னீ ராண்டுஎல்லையாகக் கொண்டு பாடுதலும் உண்டு. பெண் ணுக்குப் பன்னீராண்டு என்பதுவெண்பாப் பாட்டியல் செய்தி. அரசற்கு முடிகவித்தல் பருவம் எல்லைஎன்னும், நவநீதப் பாட்டியல். பிரபந்த தீபிகை பருவந்தோறும் திங்கள்அல்லது ஆண்டு எல்லை வகுக்கிறது. காப்பு – 2 திங்கள்; செங்கீரை 5திங்கள்; தால் – 7 திங்கள்; சப்பாணி – 9 திங்கள்; முத்தம் – 11திங்கள்; வருகை – ஓர் ஆண்டு நிறைவு; அம்புலி – ஒன்றரை ஆண்டு; சிற்றில்2 ஆண்டு; பறை முழக்கல் – 3 ஆண்டு; இரதம் ஊர்தல் – 4 ஆண்டு. மூன்றுமுதல் 21 திங்கள் வரை ஒற்றைப்படைத் திங்களில் இப்பருவங்கள் கொள்ளப்படும் என்று சிதம்பரப் பாட்டியல், இ.வி. பாட்டியல், தொ.வி.செய்யுளியல் என்பன கூறுகின்றன.இந்திரகாளியம் பல பருவங்களைக் கூறுகிறது. பிறப்பு, ஓகை, காப்பு,வளர்ச்சி, அச்சமுறுத்தல், செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,அம்புலி, சிற்றில், குழமகன், ஊசல் முதலியன அவை.பிற பாட்டியல்கள் ஆண்பாற்பருவம் எனவும், பெண்பாற் பருவம் எனவும்,பத்தாக வகுத்துத் தனியே வரையறுக்கின் றன. காப்பு, செங்கீரை, தால்,சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற்பிள்ளைத் தமிழுக்கும்பொதுவான பருவங்கள். ஆண்பாற்கே சிறப்பாக உரிய இறுதி மூன்று பருவங்கள்சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன. இனிப் பெண்பாற்கே உரியஇறுதிப்பருவங்கள் கழங்கு, அம்மானை, ஊசல் எனவும், சிற்றிலிழைத்தல்,சிறுசோறாக்கல், குழமகன், ஊசல், காமன் நோன்பு எனவும் வெவ்வேறுபாட்டியல்களில் சொல்லப்பட்டுள்ளன. பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குப் பலபருவங்கள் இறுதியில் கூறப்படினும், பொதுவான அவ்வே ழோடே சிறப்பானஎவையேனும் மூன்றே கூட்டிப் பத்துப் பருவமாகப் பாடுதலே மரபு.இந்நூல்கள் குறிப்பிடாத நீராடற்பருவம் மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழில்பாடப் பட்டுள்ளது.இனி, யாப்புப் பற்றிய கருத்து; இந்திரகாளியம், பருவ மொன்றுக்கு 1,3, 5, 7, 9 அல்லது 11 எனக் கொச்சகக்கலி, 12 அடியின் மிகாதநெடுவெண்பாட்டு ஆகிய இவ்யாப்பில் பாடப்படும் என்று கூறும். பிறப்பு,ஓகை, வளர்ச்சி, அச்சம் ஆகிய நான்கும் 1, 3, 5 அல்லது 7 எனச் செய்யுள்பாடப் பெறும் எனவும் அந்நூல் கூறுகிறது. பன்னிருபாட்டியல், அகவல்விருத்தம் கலிவிருத்தம் கட்டளை ஒலி நெடுவெண் பாட்டு இவற்றால்பிள்ளைக்கவி பாடப்படும் எனவும்; வெண்பாப் பாட்டியல்சிதம்பரப்பாட்டியல் இலக்கண விளக்கப் பாட்டியல் தொன்னூல் விளக்கச்செய்யுளியல் சுவாமி நாதம் என்பன, வகுப்பு அகவல்விருத்தம் இவற்றால்பாடப்படும் எனவும்; நவநீதப்பாட்டியல், மன்ன விருத்தம் ஈரெண்கலை வண்ணச்செய்யுள் இவற்றால் பாடப்படும் எனவும்; முத்து வீரியம்அகவல்விருத்தத்தால் பாடப்படும் எனவும் கூறுகின்றன.பருவத்திற்குப் பத்துப்பாடல் என்பது பெரும்பான்மையான பாட்டியல்களதுவரையறை. காப்புப் பருவத்துக்கு பாடல்கள் 9 அல்லது 11 என வரவேண்டும் எனநவநீதப் பாட்டியலும் இ.வி. பாட்டியலும் குறிக்கின்றன.காப்புப்பருவத்தில் பாடப்படும் கடவுளர் இன்னார் என்பதும்,அவர்களுள் முதற்கண் பாடப்படுபவர் திருமாலே என்பதும், இப்பருவத்துள்பாடப்படும் அக்கடவுளர் பற்றிய செய்தியில் கொலைத் தொழில்தவிர்க்கப்படும் என்பதும் பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல்,நவநீதப் பாட்டியல், இலக்கண விளக்கப்பாட்டியல் – என இவை கூறும்சிறப்புச் செய்தி.